மத்திய அரசின் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி ஆணையத்தில் (Indian Council Of Social Science Research – ICSSR) பொருளாதார ஆலோசகர், தலைமை கணக்கு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள் : 31
1. Financial Adviser& Chief Accounts Officer – 1
2. Documentation Officer – 6
3. Programmer – 2
4. Section Officer (Administration/Accounts) – 1
5. Upper Division Clerk – 9
6. Lower Division Clerk (Direct) – 12

பணியிடம் : தில்லி
கல்வித்தகுதி :
1. Financial Adviser & Chief Accounts Officer – மத்திய அரசின் ICSSR நிறுவனத்துடன் தொடர்புடைய பணிகளில் பொருளாதார ஆலோசகராகவும் கணக்கு பதிவியலில் நன்கு தேர்ச்சியடைந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Documentation Officer – ஏதேனும் ஒரு சமூக அறிவியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியல் அல்லது அதற்கு இணையான படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Programmer – சமூக அறிவியல் அல்லது புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது செயல்முறை ஆராய்ச்சியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். JAVA SCRIPT. PYTHON, PHP போன்ற கணினி புரோளகிராம்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் சமூக அறிவியல் தரவுகளில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. Section Officer (Administration /Accounts) – கணக்குப் பதிவியலில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. Upper Division Clerk, 6. Lower Division Clerk – பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 28 வரை

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 400, எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு , தட்டச்சு தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.06.2018

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தினை www.icssr.org என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, புகைப்படம், அடையாளச் சான்று, பிறந்த தேதிக்கான சான்று, கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து, ”Administrative Officer, Indian Council Of Social Science Research, Aruna Asaf Ali Marg, New Delhi – 110067” என்ற முகவரிக்கு 4.6.2018 க்குள் கிடைக்குமாறு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாள் : ஆகஸ்ட் / செப்டம்பர் 2018
மேலும் விபரங்களுக்கு www.icssr.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.