புதுதில்லி:
இந்தியாவின் மொத்த விலைக்குறியீடு, மார்ச் மாதத்தில் 2.37 சதவிகிதமாக இருந்த நிலையில், அது ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்கள், எரிபொருள் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், மொத்த விலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் வருடாந்திர விலை உயர்வும் கணக்கிடப்படுகிறது. மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம்தான் இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் தயாரித்து வெளியிடும்.

அந்த வகையில், மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மொத்த விலைக்குறியீடு 3.18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை 0.87 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை, பிப்ரவரி மாதத்தை விட 0.29 சதவிகிதம் குறைந்திருந்தது. ஆனால், தற்போது மொத்த விலைக்குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: