புதுதில்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின் 2013-ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணிக்காகச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.குற்றச்சாட்டு நிரூபணமானதால் மூன்று வீரர்களுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது.இந்த வழக்கில் ஸ்ரீசாந்தை விடுவிப்பதாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து காவல்துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வழங்காமல் தில்லி உயர்நீதிமன்றம் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும்,வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவைச் செவ்வாயன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஜூலை மாதத்துக்குள் கிரிக்கெட் சூதாட்ட மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனத் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.