இந்திய விவசாயிகள் 64% வேலை நேரத்தை இழந்துள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.

தில்லி: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ”உலக வேலை வாய்ப்பு மற்றும் சமுக பார்வை 2018: வேலையின் பசுமை ”என்ற அறிக்கையை வேளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி 1995ம் ஆண்டிலிருந்து 4.2% மொத்த வேலை நேரத்தை அதிக வெப்ப உயர்வால் இழந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 21ம் நூற்றாண்டு வரை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதன்படி 2030ம் ஆண்டில் உற்பத்தி இழப்பு 5.3% அதிகரிக்கும். இந்த இழப்பு 30.8 மில்லியன் முழு நேர வேலையை பாதிக்கும். இதன் பின்னடைவாக 64% மெத்த வேலை நேரத்தை வெயில் தாக்கத்தால் 2030ல் இழக்க நேரிடும். புவி வெப்பமடைதல் காரணமாக இந்த இழப்பு ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. இதன் தாக்கம் பொருளாதார நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி, நுகர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றையும்  பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: