மாமேதை கார்ல் மார்க்ஸ் 200ஆவது ஆண்டுவிழா உலகெங்கிலும் மே 5அன்று பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்றார். அதன் நிறைவாக லண்டன் மார்க்ஸ் நினைவு நூலகத்தில் நடைபெற்ற ‘மார்க்ஸ் 200 : சர்வதேச மாநாட்டில்’ ஆற்றிய உரை இங்கு தரப்படுகிறது.இந்திய கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), எப்படி மார்க்சியத்தை உள்வாங்கி தன்வயப்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றி இந்த தருணத்தில் பேச விரும்புகிறேன்.

மார்க்சியம் என்பதன் நிகழ்ச்சி நிரலை முழுமையாகப் புரிந்து கொள்ளும்போதுதான் அது தனித்தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்; நாம் புரிந்து கொள்ள வேண்டிய மார்க்சியத்தின் நிகழ்ச்சி நிரல் என்னவென்றால், வர்க்க பேதமற்ற ஒரு கம்யூனிச சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதுதான். குறிப்பாக, முதலாளித்துவத்தைப் பற்றிய மார்க்சியத்தின் புரிதல் என்பது, மனிதகுல வரலாற்றில் முதலாளித்துவத்தையும் தாண்டிய சமூகம் உருவாவதற்கான சாத்தியங்கள் – வாய்ப்புகள் என்ன என்பதை வரையறை செய்வதுதான். எனவே முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான தருணம் வரும் வரையில் காத்திருப்பது என்று மார்க்சியம் கருதவில்லை. முதலாளித்துவத்திற்குப் பிறகு மார்க்சியத் தத்துவமும் உலகம் பற்றிய அதன் கருத்தோட்டமும் அறிவியல் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொடரும்; சோசலிச கட்டுமானத்திற்காகவும் அதிலிருந்து கம்யூனிசத்தை நோக்கிய பயணத்திற்காகவும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொள்ளும்.

மார்க்சியம் என்பது முன்கூட்டி முடிவு செய்யப்பட்டு இதுவே இறுதி என்று வரையறை செய்யப்பட்ட ஒன்றல்ல; மாறாக அது ஒரு படைப்பாக்க அறிவிய
லாகும். “திட்டவட்டமான சூழ்நிலைமைகள் குறித்து திட்டவட்டமான பகுப்பாய்வு” என்பதன் அடிப்படையிலும் அது சார்ந்த பிற கோட்பாடுகளின் அடிப்படையிலும் மார்க்சியம் செயல்படுகிறது. மார்க்சியம் என்பது பொதுவாக வரலாற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான அணுகுமுறையாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தைப் பற்றி பகுப்பாய்வு செய்வதற்கான அணுகுமுறையாகும். அந்த அடிப்படையில், மார்க்ஸ் உருவாக்கித் தந்துள்ள அடித்தளத்தில் நின்று கொண்டு, தற்போதைய சூழ்நிலைமைகளை புரிந்துகொள்வதற்காக நமது தத்துவத்தை தொடர்ச்சியாக செழுமைப்படுத்திட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்திற்கான வாய்ப்பு
களையும் பற்றிக் கொள்ள வேண்டும்.

எனவே யாரும் புக முடியாத, முற்றிலும் மூடப்பட்ட ஒரு கோட்பாடாக இல்லாமல், மார்க்சியம் என்பது தொடர்ச்சியாக செழுமைப்படுத்தப்படுகிற ஒரு நடைமுறைக் கோட்பாடாகத் திகழ்கிறது.அதனால்தான் அது ஒரு படைப்பாக்க அறிவியலாகத் திகழ்கிறது.
இன்னும் சொல்லப்போனால் மார்க்சியம் மட்டும்தான், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான இயக்கவியல் உறவு மற்றும் விளைவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாகிற போக்குகள் மற்றும் சூழல்கள் குறித்து மிகச் சரியான முறையில் அடையா
ளம் காண்பதற்கான சக்தி கொண்டதாக இருக்கிறது. மனித குலத்தின் அனைத்து இயங்கு தளங்களையும் சுற்றி இந்தப் பகுப்பாய்வை மேற்கொள்ளும் பலம் பொருந்தியதாக மார்க்சியம் இருக்கிறது.

மனிதகுலத்தில் இதுவரைக்கும் நடந்துள்ள ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் – வான் இயற்பியல் முதல் நேனோ தொழில்நுட்பம் வரை – அனைத்துமே இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை மேலும் மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளன. தொழில்நுட்பங்கள் வளரும் போது அறிவுத்துறையில் செயற்கையாக உருவாக்கப்படும் அச்சுறுத்தல்கள் மனிதகுலத்தின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி விடுமோ என்ற நெருக்கடி எழும் போதும் கூட, அத்தகைய நிலைமையை எதிர்கொள்வதற்கான பலம் மார்க்சியத்திற்கு மட்டுமே உள்ளது.

இன்றைய உலகம் – ஏகாதிபத்திய உலகமயம்
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில், பனிப்போரின் ஊடாக, உலக முதலாளித்துவம் அமைதியான முறையில் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு
கிடைத்தது. இது மூலதனம் மிகப்பெரிய அளவிற்கு குவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. 20ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இது மேலும் தீவிரமடைந்தது. முன்னாள் சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பிய
முன்னாள் சோசலிச நாடுகளும் மீண்டும் முதலாளித்துவ வட்டத்திற்குள் வந்து சேர்ந்தன. இந்த நிலையில் பிரம்மாண்டமான மூலதனக் குவிப்பு என்பது, சர்வதேச நிதி மூலதனம் உருவாவதற்கும் நிலைநிறுத்திக் கொள்வதற்கும், அதைத் தொடர்ந்து மேலும்
மேலும் மூலதனக் குவிப்பை தீவிரப்படுத்துவதற்கும் வழிவகுத்தது ; மூலதனக்குவிப்பு மையப்படுத்தப்படுவதற்கும், அது மிகப்பிரம்மாண்டமான அளவை எட்டு
வதற்கும் வழிவகுத்தது.

ஏகாதிபத்தியம் என்ற கட்டத்தை நோக்கிய முதலாளித்துவத்தின் பயணத்தில் தற்போதைய நிலைதான் உலகமயம் ஆகும். இங்கு சர்வதேச நிதி மூலதனத்தால் நிகழ்த்தப்படுகிற மூலதனக்குவிப்பு என்பது இன்னும் இன்னும் அதிகமான அளவுகளை எட்டியுள்ளது. இந்த சர்வதேச நிதி மூலதனமானது இன்றைக்கு தொழில் மூலதனம் மற்றும் இதர வடிவங்களிலான மூலதனத்தோடு பின்னிப் பிணைந்துவிட்டது; அதன் மூலமாக லாபத்தை பன்மடங்காகப் பெருக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: