இராமநாதபுரம்:
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற வேன் திருவாடானை அருகே மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் தலைமையில் 17 பேர் வேளாங்கண்ணிக் வேன் மூலம் சென்றுள்ளனர். திருவாடானை அருகே நாகநேந்தல் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் போது எதிரே மணல் ஏற்றி வந்த லாரி, வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புஷ்பராஜ், ஜான், புனிதா, சிறுவன் ரிப்பான் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலே பலியானர். இதில் படுகாயமடைந்த கஜோல், தர்ஷினி,பிஷ்ரோ,லிபிலா உள்ளிட்ட 14 பேரை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரவு முழுவதிலும் மணல் கடத்துவதால் அதிக வேகத்துடன் லாரிகள் செல்வதால் இந்த விபத்து நடைபெற்றுளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அனைத்து வகையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மேல் கிசிச்சை அளிக்க மதுரைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயாராக வைக்கவும் மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நடராஜன், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave A Reply

%d bloggers like this: