அமெரிக்காவின் ப்ரூப்பாயிண்ட் நிறுவனம்  மென்பொருள் சேவையை வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வேகா ஸ்டீளர் என்ற தீம்பொருளை கண்டுபிடித்துள்ளனர். அந்த  தீம்பொருள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இருந்து தகவல்களை திருடுகிறது.  கடவுச்சொல், கிரெடிட் கார்டுகள், சுயவிவரங்கள், மற்றும் பணம் செலுத்திய விவரங்கள் ஆகியவற்றை திருடும் தன்மை கொண்டது. இந்த தீம்பொருளை “ஆன்லைன் ஸ்டோர் டெவெலபர் தேவை” என்ற பொருள் வரி பெயரில் மின் அஞ்சல் மூலமாக பரவி வருகிறது. அந்த மின் அஞ்சலில் வேகா ஸ்டீளர் பதிவிறக்க இணைப்பு உள்ளது. அதை தோடும் போது அந்த தீம்பொருள் செயல்படுத்தப்படுகிறது என ப்ரூப் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: