உஜ்ஜைனி:
மத்தியப்பிரதேச பாஜக அரசானது, நர்மதா சேவா யாத்திரை என்ற பெயரில் நர்மதா ஆற்றில் மிகப்பெரிய மணல்கொள்ளையை அரங்கேற்றி வருவதாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர்

இதுதொடர்பாக பேசியிருப்பதாவது:
நாட்டில் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. முதியோருக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆனால், இவை பற்றியெல்லாம் பாஜக கவலைப்படுவது இல்லை. மக்களுக்குக் கனவுகளைத் தந்துவிட்டு தங்களின் பைகளில் பணத்தை நிரப்பிக் கொள்வதே அரசின் கொள்கையாகி விட்டது.
மோடி அரசு ஊழலைப் பரவலாக்கியுள்ளது. அரசின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் நிரம்பியுள்ளது.பிரதமர் தாம் ஊழல் செய்வதில்லை; ஊழல் செய்ய அனுமதிப்பதும் இல்லை என்று கூறி வருகிறார். அவர் ஒருமுறை மத்தியப்பிரதேசத்திற்கு வந்து, இங்கு நடப்பது என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 14 வருடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத்தை பாஜக அரசு பாழாக்கி விட்டது. மாநிலம் முழுவதும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களும், குழந்தைகள் இறப்பும் மிக மோசமான அளவிற்கு அதிகரித்து விட்டன.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நர்மதா சேவா யாத்திரை செய்வதாக கூறிக் கொள்கிறார். ஆனால், அது நர்மதா ஆய்வு யாத்திரை ஆகும். பகலில் நர்மதா ஆற்றில் உள்ள மணல் வளங்களை யாத்திரையின் போது ஆய்வுசெய்து விட்டு, இரவில் அதை கொள்ளையடிக்கும் திட்டமாகும்.இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: