சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்த நகரத்தின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில், உலகின் மிக மோசமான காற்றை கொண்ட நகரமாக கான்பூரை அறிவித்திருக்கிறது.

30 லட்சம் மக்களை கொண்ட கான்பூரில் கடந்த 5 வருடத்தில் மட்டும் காற்றால் உடல் உபாதைகளுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக மாறியுள்ளதாக கணேஷ் சங்கர் மருத்துவமனையில் மருந்துகள் துறை தலைவராக உள்ள பிரேம் சிங் கூறுகிறார்.

அது மட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 4300 நகரங்களை ஆராய்ந்த அறிக்கையில், தலைநகர் புதுதில்லி, ஆக்ரா மற்றும் தாஜ்மகால் உட்பட 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காற்று மாசுபாட்டில் குழந்தைகளும், முதியவர்களுமே அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாட்டால் இறப்பவர்களின் 90 சதவீதம் நடுநிலை மற்றும் கீழ் நிலை வளர்ச்சி கொண்ட நாடுகளில்தான் அதிகம் எனவும், முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் எனவும் தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் தலைநகர் தில்லி காற்று மாசுபாட்டை குறைக்க கணிசமான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் வட இந்தியாவின் மற்ற காற்று மாசுபாடான நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: