மதச்சார்பாற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து கார்நாடகாவில் புதிய அரசை அமைப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் மதச்சார்பாற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என சீத்தாரமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது குலாம்நபிஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். இதனால் கார்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலை நீடிக்கிறது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை பெற்று வந்த இடங்களில் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தற்போது வரை 88 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 16 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.1 அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 20 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மொத்தத்தில்  அதிகபட்சமாக 78 இடங்களில் காங்கிரஸ்  வெற்றி பெறும் என்ற நிலை நீடிக்கிறது.
மதச்சார்பற்ற ஜனதாதளம் தற்போது வரை 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.. 11 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தத்தில் 38இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் எப்படியாவது மதச்சார்பற்ற ஜனதாதளத்தை பாஜக பக்கம் கொண்டு வர அனைத்து வேலைகளிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியையே மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு விட்டுக் கொடுத்து பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் செய்வது என்ற நிலைக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களில் யாரையெல்லாம் விலைபேச முடியும் என பாஜக குழு அமைத்து களத்தில் இறங்கியருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேவைப்படும் பட்சத்தில் மத்திய புலனாய்வுதுறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பிரிவுகளையும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்க பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது-

Leave A Reply

%d bloggers like this: