புதுதில்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகிய  அடுத்த இரு நாள்களில் அவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஐசிசியின் இயக்குநர்கள், ஐசிசியில் உறுப்பினராக இருக்கும் கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவு சஷாங்க் மனோகருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தனது பதவிக்காலம் (2018 ஜூன் வரை) முடியும் வரை அந்தப் பதவியில் நீடிக்க முடிவெடுத்தார். போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: