பாக்தாத்:
இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெற்றுள்ள வரலாறு காணாது வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1934இல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முறைாயக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

முஸ்லீம் மத நம்பிக்கையாளர்களின் புனித நகரங்களில் ஒன்றான நஜாபில் சுகாப் அல் கதீப் வெற்றிபெற்றுள்ளார். திகரில் கட்சி வேட்பாளரான ஹைப அல் அமீனும் வெற்றி பெற்றுள்ளனர். முக்தாத அல் சபரின் தலைமையிலான அமெரிக்க எதிர்ப்பு கூட்டணிஇராக் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனாலும் சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை அரசமைக்க அனுமதிக்க முடியாது என்பது ஈரானின் நிலைபாடாக உள்ளது. அமெரிக்காவும் என்னவிலை கொடுத்தாவது சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயன்று வருகிறது.இராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி மத்திய கிழக்கு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உற்சாகமளிக்கும் என்பது உறுதி. அண்மைக்காலத்தில் ஏராளமான ஊழியர்கள் படகொலை செய்யப்பட்டனர், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டன. இந்த பின்னணியில் இராக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.2008இல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஸ்ஸுக்கு எதிராக காலணி வீசிய பெண் பத்திரிகைாளர் மும்தாஸ அல் செய்தியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.