இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களைச் சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீளம் பள்ளத் தாக்கு பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கு ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலம் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.  இதனால் பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்தது. அதில் சுமார் 25 மாணவர்கள் ஆற்றின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தண்ணீருக்குள் குதித்து சிலரை உயிருடனும் 7 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். இதில் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply