பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே பழுதடைந்த சாலையினால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த உடுமலை சாலையில் உள்ளசின்னாம்பாளையம் ஊராட்சி சக்தி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. இதன்பின்னர் சாலையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: