கோவை,
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டுமென விவசாய தொழிலாளர் சங்க மதுக்கரை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கோவை மதுக்கரை ஒன்றிய மாநாடு ஞாயிறன்று சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ்.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி துவக்க உரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், சிபிஎம் மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சிஐடியு நிர்வாகி பஞ்சலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சட்டக்கூலி ரூ.224ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். நூறுநாள்வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். வேலை கேட்டு மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் ஆகியதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக ரவிமாரியப்பன், செயலாளராக சாவடி கந்தசாமி, பொருளாளராக வி.ஆறுச்சாமி மற்றும் 12 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முடிவில் மாவட்ட தலைவர் திருமலைசாமி உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.