சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து சேலத்தில் ஆவேசமிகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராத மாநில அதிமுக அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் பிரவீன் குமார், பொருளாளர் வெங்கடேஷ், வடக்கு மாநகர தலைவர் சதீஸ்குமார் உள்ளிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: