ஈரோடு, ;
அனுமதியற்ற மனைப்பிரிவுகளின் தனி மனைகளை வரன்முறைப் படுத்துவதற்கான  சிறப்பு முகாம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனித்த மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க 3.11.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விரைவில் விண்ணப்பித்து தனிமனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். இணையதள விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த கிராமப் புறங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரையும், பேரூராட்சிகளில் செயல் அலுவலரையும், மாநகராட்சி, நகராட்சிகளில் ஆணையாளரையும் சிறப்பு முகாம் அமைத்து விரைவில் தனிமனைக்கான வரன்முறை உத்தரவு வழங்க நகர் ஊரமைப்பு ஆணையரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் மே 15 ஆம் தேதி அன்று ஈரோடு, ஊசி.எஸ்.செங்கோட்டையா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் மண்டலம் 3, 4 மற்றும் மொடக்குறிச்சி தாலுகாவில் அடங்கும் உள்ளாட்சிப் பகுதிகளில் 20.10.2016-க்கு முன்பு கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளை மனை உரிமையாளர்கள் இணையத்தில் ரூ.500 பணம் செலுத்தி, அதன் ரசீதுடன் வந்து சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும், மனை உரிமையாளர்கள் மனை வரன்முறைக்காக முகாமிற்கு வரும்போது டிடிசிபி இணையத்தில் தனித்த மனைக்கான கூராய்வுக் கட்டணம் ரூ.500 செலுத்திய விபரம், மனையின் கிரயப்பத்திர நகல் (20.10.2016-க்கு முன் கிரையம்), மனை அமையும் மனைப்பிரிவின் வரைபட நகல், (மனைப்பிரிவு வரைபடம் அடங்கிய குறுந்தகடு – கட்டாயம் இல்லை), அடையாள அட்டை போன்றவற்றை எடுத்து வருமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

Leave a Reply

You must be logged in to post a comment.