கோவை,
கோவையிலுள்ள உயிரியல் பூங்கா ரூ.20 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

கோவையிலுள்ள பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வருவது வ.உ.சி உயிரியல் பூங்கா. கடந்த 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் தற்போது ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பூங்காவில் சிங்கம்,கரடி, புலி போன்ற விலங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.  ஆனால், அழியும் நிலையில் உள்ள உயிரினங்களுக்கு வனத்தின் சூழ்நிலை போலவே கூண்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து அவ்விலங்குகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த பூங்காவில் அவ்வாறு அமைப்பதற்கு போதிய இடமில்லாத காரணத்தால் அவ்விலங்குகள் இடம்மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பூங்கா ரூ.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது, இதன்படி அருகிலுள்ள பொதுபூங்காவும், உயிரியல் பூங்காவும் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புதிய உயிரினங்கள் மற்றும் பூங்காவும் மேம்பட உள்ளது. இதற்காக மத்திய உயிரியல் ஆணையத்திற்கு தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி அளித்த பின் மேம்பாட்டுக்கு தேவையான பணிகள் தொடங்கும் என பூங்கா இயக்குநர் இ.செந்தில்நாதன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.