தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிக்கும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும். அதுபோன்று, தமிழ்நாட்டின் நகர்புறங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருக்கும். இது 2025 ஆம் ஆண்டில் 18 லட்சமாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டில் 4,27,880 ஆக இருந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 6,37,762 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப்புறங்களில் 2015 ஆம் ஆண்டில் 9,45,005 ஆக இருந்த புற்றுநோயாளி களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 11,58,213 ஆக அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, 2015 ஆம் ஆண்டில் 13,72,885 ஆக இருந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 17,95,975 ஆக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச நகர்புறங்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படு கின்றனர். லட்சத்தீவு, டாமன், டையூ மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் புற்றுநோய் பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது. ஆண்களுக்கு புகையிலையினால் ஏற்படும் புற்று நோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிக ளவில் ஏற்படுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆறு மாதத்திற்கு முன்பு எல்ஐசி சார்பில் புற்றுநோய்க்கான காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு பெரிய வரவேற்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமான பாலிசிகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபரங்கள் எல்லாம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. புற்றுநோய் மேலும் மேலும் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டியதன் அவசியத்தை இந்த விபரங்கள் உணர்த்து கின்றன. நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசு சார்பில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் இருந்தாலும், புற்றுநோய் மருத்துவம் என்பது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பெரும் கொள்ளைக்கான களமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. காசு இல்லாதவர்கள் புற்றுநோய் என்று தெரிந்தாலும் சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பே இல்லாமல் மரணத்தை எதிர்பார்க்கும் கொடூரம் கண்முன்னே நிகழ்கிறது. பொறுப்பில் உள்ள அரசாங்கங்கள் இதை மவுனமாக கடந்துசெல்கின் றன. இந்த பொறுப்பின்மையை கைவிட்டு, உருப்படியான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: