திருவாரூர்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 9 ஆவது மாநாடு திருவாரூரில் மே 28, 29, 30 ஆகிய நாட்களில் தெற்குவீதியில் உள்ள ஏ.கே.எம். டவர்ஸ் காசிநாதன் திருமண அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் நோக்கத்தை விளக்கி பல்வேறு கலைக்குழுக்களின் பிரச்சாரமும் நடைபெறவுள்ளது. நிறைவு நாளான 30 ஆம் தேதியன்று புதிய ரயில் நிலைய சந்திப்பில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி புறப்பட்டு, தெற்குவீதியில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, பொதுச்செயலாளர் ஏ.விஜயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், வி.மாரிமுத்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) வீ.அமிர்தலிங்கம், ஐ.வி.நாகராஜன், ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். பேரணியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் குடும்பத்துடன் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: