சேலம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகர மேற்கு கமிட்டி காசக்காரனூர் கிளை சார்பாக ஞாயிறன்று அப்பகுதியில் உழைப்பு தான நிகழ்ச்சி நடைபெற்றது . சேலம் மாநகர மேற்கு காசக்காரனூர் பகுதியில் சாக்கடைகளை தூர்வாரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுத்தம் செய்தனர். இப்பணியில் சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாலிபர் சங்கத்தின் இச்செயலுக்கு அப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: