சேலம்,
சேலம் மாநகரம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று திறந்து வைத்தார்.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவாகவுண்டனூரில் இருந்து குரங்குசாவடி பகுதி வரையில் சுமார் 82.27 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கவுள்ளார். மேலும், ரூ.70. 15 கோடி மதிப்பிலான மேம்பாலம், தாரமங்கலம் புறவழிச்சாலையில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய காவல் நிலையம் துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். சேலம் மாநகர் காவல் துறையினர் சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட தகட்டினை முதல்வர் வெளிட்டார்.

இதனை தொடர்த்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், கோதாவரியையும் காவிரியும் இணைக்க மத்திய அரசு திட்டத்தின் மூலம் கோதாவரி தண்ணீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்தில் மாயனூர் நீர்த்தேக்கம் பெரெஜ் கொண்டு வரப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டும். இதன் மூலம் நமக்கு தேவையான 125. டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்றும், மேட்டூர் அணையிலிருந்து வீணாகும் தண்ணீரை சேலம் , நாமக்கல், திருச்சி மாவட்டங்களுக்கு தனி கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.இவிழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகினி, அரசு அலுவலகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: