கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மோதிலால் தெருவில் மே 14 (திங்களன்று) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோயில் மடம் அறக் கட்டளை, தேவாலயங்கள், வக்ப்போர்டு ஆகியவற்றிற்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்வோர், தரை வாடகைகொடுத்து குடியிருப்போர்-வியாபாரம் செய்வோர் மாநில சிறப்பு மாநாடு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமையில் திங்களன்று நடைபெறுகிறது.

சிறப்பு மாநாட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், இந்து அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையர்கள் என்.எல்.ஸ்ரீதரன், ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் அனைவரும் கலந்துகொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: