புதுதில்லி,
காவிரி வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலை காரணங்காட்டி, காவிரி வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மேலும் மேலும் மத்திய பாஜக அரசு அவகாசம் கோரிவந்தது.

இந்நிலையில் திங்களன்று காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, மே 14 ஆம் தேதி காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், கூடுதல் அவகாசம் கோரப்படாது என்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உறுதியளித்தார். அதனடிப்படையில், காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது, வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவிரி வழக்கில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப் பிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, இம்மாத இறுதிக்குள் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 72 டி.எம்.சி. நீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 72 டி.எம்.சி. நீர் பாக்கி வைத்துள்ள நிலையில், அண்மையில் தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்று பொதுப்பணித்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: