உதகை,
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் உதகை மலர்கண் காட்சி நடத்தப்படுவதை தொடர்ந்து ஞாயிறன்று பல வண்ண மலர்த்தொட்டிகளை, மலர் கண் காட்சித்திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் உதகை மலர்க்காட்சி நடைபெருவதை தொடர்ந்து பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர் காட்சித்திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசுகையில், இந்தாண்டு மலர்கண்காட்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழச்சாமி இம்மலர்கண் காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். இந்தாண்டு மே 18 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி ஆகிய 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பம்சமாக 1,500 மலர் தொட்டிகள் இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம்,ஓரியண்டல்லில்லி, க்ரைசாந்திமம், காஸ்மாஸ் ட்வார்ப், வின்கா, காம்ப்ரினா, கேம்பனுலா, கைலார்டியா. க்ளேடியோலஸ், கேல், சினரேரியா, க்ளாக்சீனியா செலோசியா பூன்று 185 ரகங்கள் பொதுமக்களின் ரசனைக்கு ஏற்றாற்போல் அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இவ்வாண்டு மலர்காட்சிக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் சுமார் 20 ஆயிரம் பல வண்ண மலர்த்தொட்டிகள் கண்ணிற்கு குளிர்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து பூங்காவில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி மாளிகை கட்டும் பணியினை பார்வையிட்டு, துரிதமாக பணியினை முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், முதல்வர் எடப்பாடி கே.பழச்சாமி மலர்க் கண்காட்சியினை துவக்கிவைத்து. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள மேடையினை பார்வையிட்டும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சிகளில் தோட்டக்கலை இணை இயக்குநர் (பொ) சிவசுப்ரமணியம் சாம்ராஜ், துணை இயக்குநர் உமாராணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: