பெங்களூரு:
கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி தொகுதியில், வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், வாக்குப்பதிவு இயந்திரம் இடமாற்றி வைக்கப்பட்டது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான தேவகவுடா, சாமுண்டேஸ்வரி தொகுதியில்தான் வசிக்கிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும், இந்த தொகுதியில்தான் வாக்கு இருக்கிறது. எனவே, சனிக்கிழமையன்று, தேர்தலில் வாக்களிப்பதற்காக, தேவகவுடா மனைவி தனது வாக்குச் சாவடிக்கு சென்றார்.அங்கு, மின்னணு வாக்குப்பதிவு இந்திரம் இருந்த திசையைப் பார்த்துவிட்டு வாக்களிக்க மறுத்துவிட்டார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடமானது, சரியான இடம் கிடையாது, வாஸ்து சாஸ்திரம் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக இடத்தை மாற்றுங்கள் என்று தேவகவுடா மனைவி கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் மிகுந்த பிடிவாதத்துடனும் இருந்துள்ளார். தேவகவுடா மனைவியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, வரிசையில் நின்ற வேறு சிலரும் அவருக்கு ஆதரவாக, திசையை மாற்றாவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி வாக்குப்பதிவு இயந்திரமானது, வாஸ்து அடிப்படையில் இடமாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, வாஸ்து பிரச்சனை காரணமாக வாக்குப்பதிவு எந்திரம் இடமாற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: