ஐசால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் ஐசால் மாவட்டத்தில் சனியன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சீமாபாக் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக ஐசால் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். அதேசமயம், நிலச்சரிவு ஏற்பட்டபோது காணாமல் போனவர்களில் மேலும் சிலர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Leave A Reply

%d bloggers like this: