கோலாலம்பூர்:
ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மகாதிர் முகமது கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக சனியன்று மகாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகமதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மகாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மன்னர்
அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் மே 15 ஆம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்ததகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply