உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சனியன்று 16-வது ரோஜா கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.இந்த ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக 25 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 12 அடி நீளம் 16 அடி உயரத்தில் இந்தியா கேட் உருவமைப்பும், 5 ஆயிரம் மலர்களை கொண்டு குழந்தைகளை கவரும் சோட்டா பீம் உருவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரோஜா இதழ்களை கொண்டு ட்வீட்டி கார்ட்டூன், ரங்கோலி போன்ற உருவமைப்புபகள் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் மூலம் 6 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஜல்லிக்கட்டுக் காளை உருவ அமைப்பும், ஈரோடு மாவட்டத்தினர் 6 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு மயில் உருவமைப்பும், கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் 5 ஆயிரம் மலர்களை கொண்டு படகு உருவமைப்பும், திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் சார்பாக கல்யாண மாலை மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த திருநெல்வேலி ரோஜா அல்வா ஆகியவைகளை பல்வேறு மாவட்டத்திலிருந்து வந்து இங்கு காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.அர்ஜூணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் , மாவட்ட காவல்கண்காணிப்பாளர் முரளிரம்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: