நியூயார்க்:
இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்து அரசியல்வாதிகள் எந்த நேரத்திலும் புகார் செய்வதற்கான துரித மின்னஞ்சல் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துமீறலான கருத்து களைப் பதிவிடுதல், தகவல்களைத் திருடுதல் உள்ளிட்ட இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்து [email protected] என்ற மின்னஞ்சலில் அரசியல்வாதிகள் உடனடியாக புகார் செய்யலாம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையப் பாதுகாப்பு குறித்த கையேடு ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் தவறான வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இணைய அத்துமீறல்களை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக புதிய இணையதளம் ஒன்றை கட்டமைக்கும் பணியையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கி உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply