சிட்னி:
வங்கதேச கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் வகையில் ஐசிசியின் சுற்றுப்பயண திட்டத்தில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.இந்தத் தொடருக்காக வங்கதேச அணி தற்போது சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முக்கியமான கால்பந்து தொடர் நடைபெற இருப்பதாகவும்,ஒரே நேரத்தில் கிரிக்கெட்,கால்பந்து போட்டிகளை நடத்தினால் ஒளிபரப்பு உரிமையில் பிரச்சனை உருவாகும் எனக்கூறி வங்கதேச அணிக்கெதிரான தொடரை ரத்து செய்யப்போவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடர் ரத்து குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை.வங்கதேச அணி கடைசியாக 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் திடீர் முடிவால் 15 வருடங்கள் கழித்து வங்கதேச அணி ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கானல் நீராய் போனது.

Leave a Reply

You must be logged in to post a comment.