திருப்பூர்,
திருப்பூரில் வாகன ஓட்டுநர்கள் காவல்துறை அபராதத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் வசூலிப்பதற்கு பிஓஎஸ் கருவிகளை வெள்ளியன்று மாநகர காவல் ஆணையர் வழங்கினார். மேலும், நவீன கட்டுப்பாட்டு அறையினையும் திறந்து வைத்தார் .

திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் மாநகரில் விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் தமிழக அரசால் ரூ. 14 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 38 கேமராக்களும், தனியார் பங்களிப்புடன் 9 கேமராக்கள் என 47 இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன . மேலும் இவற்றின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்குமாறு நவீன கட்டுப்பாட்டு மையம் மாநகர காவல் ஆணையரகத்தில் துவங்கப்பட்டுள்ளது . இதனை மாநகர காவல் ஆணையர் நாகராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், வாகன ஓட்டுநர்களிடம் காவல்துறை பணமாக வசூல் செய்வதால் ஏற்படும் குளறுபடிகளை தடுத்திடும் வகையில், வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பிஓஎஸ் கருவிகளை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கும், போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு வழங்கினார் .

மேலும், அபராதம் வசூல் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுத்திடவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்திடும் எனவும் இனி காவல்துறையிடம் பொதுமக்கள் பணமாக அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வாகன ஓட்டுநர்கள் ஏடிஎம், கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் நேரடியாக வங்கியில் அபராதம் செலுத்தலாம் என  தெரிவித்தார் . மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்திட முடியும் என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: