தீக்கதிர்

பெரம்பலூர் அருகே விபத்து: 9 பேர் பலி…!

பெரம்பலூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மோகன் (39), முரளி ( 55). இவர்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருடன் வாடகை காரில் கொடைக்கானலுக்கு வெள்ளியன்று அதிகாலையில் சென்றனர். காரை பூபதி (23) என்பவர் ஓட்டினார். பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை நான்குவழிச்சாலையில் சென்றுகொண்டி ருந்தனர். அப்போது, எதிர்புறத்தில் திருச்சியி லிருந்து பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பான சென்டர் மீடியனை தாண்டி எதிரே மோகன் குடும்பத்தினர் வந்த காரின் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மோகன், வரது மனைவி லெட்சுமி(32), மகள்கள் பவித்ரா (13), நவிதா(8), மகன் வரதராஜன் (5), முரளி, மேகலா (19) மற்றும் ஓட்டுநர்கள் பிரபாகரன்(32), பூபதி(23) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெரம்பலூர் கல்யாண நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சக்திவேல் (51) என்பவர் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை நடதிதி வருகின்றார்.