கோவை,
கோலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களை பராமரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறையிடம் இருந்து பெற்று பராமரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையின் காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, வியாழனன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக செல்வபுரத்தில் உள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி வழிந்தது. இதனையடுத்து உடனடியாக செல்வசிந்தாமணி குளத்திற்கு வரும் தண்ணீரை உக்கடம் பெரிய குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் திறந்து விட்டனர். இதேபோல் மற்ற குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.