திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்த ஒலி மற்றும் ஒளி வடிவிலான விவரங்கள் ஒளிப்பரப்பும் விழிப்புணர்வு வாகனம் இயக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் வெள்ளியன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம்) கே.கோபால், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திறன் பயிற்சிகள் குறித்த ஒலி மற்றும் ஒளி வடிவிலான விவரங்கள் ஒளிப்பரப்பும் விழிப்புணர்வு வாகனம் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து ஊரக பகுதிகளுக்கும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முதலாக திருப்பூர் மாவட்டத்தில் தான் திறன் பயிற்சி விழிப்புணர்வு வாகனம் இயக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த விவரங்கள், இதற்காக அணுக வேண்டிய அலுவலகங்கள் விவரம், இத்திறன் பயிற்சி பெற்றவர்களின் தற்போதைய பணி நிலை போன்ற விவரங்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் வழங்கப்படுகிறது. மேலும், திறன் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணைய முகவரி www.tnsdm.tn.gov ஆகும். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்),கே.என். விஜயகுமார் (திருப்பூர் வடக்கு),காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மல்லிகா ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: