திருப்பூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு வெள்ளியன்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து 25 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதையடுத்து, முதற்
கட்டமாக 25 ஆயிரம் கடிதங்களை திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. மீண்டும்,சில நாட்களில் மீதமுள்ள 25 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும் என்றனர்.இந்த நிகழ்வில் மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிச்சாமி, தொமுச மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, துணைச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ், மகளிர்அணி மாநில துணைச் செயலாளர் மலர் மரகதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: