திருப்பூர்,
திருப்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற கணவரை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் வியாழனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியைசேர்ந்தவர் பனியன் தொழிலாளி மனோகர் (35). இவரது மனைவி பிரீத்தி (29). இவர்களுக்கு 6 மற்றும் ஒன்றரை வயதில்இரு மகன்கள்
உள்ளனர். இந்நிலையில், மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தபிரீத்தி திடீரென தரையில் அமர்ந்து, அவரது கணவர் புகைப்படத்துடன் “சட்டவிரோதமாக காவலில் வைத்திருக்கும்கணவரை மீட்டு தர கோரி உண்ணாவிரத போராட்டம்” என்றபதாகையை கையில் வைத்திருந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை சமாதனப்படுத்தி, உள்ளே சென்று மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பிரீத்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்த எனது கணவர் மனோகரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மறுநாள் காலை வரை எனது கணவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, காவல் நிலையம் சென்ற விசாரித்த போது மாலை வீடு திரும்புவார் என காவல் துறையினர் கூறினார்கள். அதன்பின்னர், காவல் துறையினர் முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், ஆட்சியரின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்த பின் பிரீத்தி போராட்டத்தை கைவிட்டார்.

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் மனோகர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதால், தேவக்கோட்டை காவல் துறையினரிடம் மனோகர் ஒப்படைக்கப்பட்டதாக தெற்கு காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.