நீலகிரி,
கோத்தகிரியில் மே 13 ஆம் தேதியன்று தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மிகக் கணிசமான எண்ணிக்கையில் தாயகம் திரும்பியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாயகம் திரும்பியோருக்கான வேலை வாய்ப்பு, வாழ்விடங்களின் கட்டமைப்பு மேம்பாடு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட நிறுவனத்தை பாதுகாத்தல், வன விலங்குகள் தாக்குதல்களில் இருந்து உரிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி தாலுகா கமிட்டியின் சார்பில் எதிர்வரும் மே 13 ஆம் தேதி தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் மற்றும் தாயகம் திரும்பியோர் நலனுக்கான இயங்கும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். முன்னதாக, இந்த மாநாட்டையொட்டி தாயகம் திரும்பியோர் பகுதிகளில் கள ஆய்வு மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.