தேனி:
தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட தலைவர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர் .வியாழனன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இடுக்கி மாவட்டம் குமுளிக்கு வந்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை ,கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் ,மூத்த தலைவர் கே.ராஜப்பன் ,மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜெயராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர் .அப்போது கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி ,இடுக்கி மாவட்ட செயலாளர் கே.கே.ஜெயச்சந்திரன் ,இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜோர்ஜ் ஆகியோர் உடனிருந்தனர் .

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதின் மாவட்ட தலைவர் ராஜா ,மாவட்ட செயலாளர் கே.ஆர்.லெனின் , இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: