தாராபுரம்,
தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மின்னணு சேவை(இ-சேவை) மையம் தாமதமாக திறக்கப்படுவதால் சிரமத்திற்குள்ளாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் மின்னணு சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானம் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றுதல், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு தேவைப்படும் சான்றுகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப் பட உள்ள நிலையில் தேவைப்படும் சான்றுகளை பெறுவதற்கு காலை 9 மணி முதலே பொதுமக்கள் கூட்டமாக காத்திருக்கின்றனர்கள். இந்நிலையில் மின்னணு சேவை மைய ஊழியர்கள் காலை 10.30 மணிக்கு மேல்தான் வருகின்றனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று சான்றுகளுக்கு விண்ணப்பிக்க மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: