திருப்பூர்,
திருப்பூர் பி.ஏ.பி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் குடிநீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சார் ஆட்சியர் சரவணகுமார் தலைமை வகித்தார். வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் திருப்பூர் வட்டம் ஆண்டிபாளையம் குளம் சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளம் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.இந்த குளம் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ளது.இந்த குளத்தில் விவசாயிகள் வண்டல் மண், செம்மண் ஆகியவைகளை எடுத்து குளத்தை ஆழப்படுத்தியுள்ளதால், தண்ணீர் நிறைந்துகாணப்படுகின்றது. திருப்பூருக்கு மிக அருகே உள்ள இந்த குளத்தில் மேற்கு பகுதியில் குழந்தைகளும் பெண்களும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இதனால் இந்த குளத்தில் படகு சவாரியை மீண்டும் துவங்க வேண்டும்.

மேலும், திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் வாரிசு சான்று பெறுவதற்கு ஆன் லைனில் விண்ணப்பித்தாலும் அவற்றை பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், பொதுமக்கள் அழைக்கழிக்கப்படுகிறார்கள், இதனால் விண்ணப்பித்து சில நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், பி.ஏ.பி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களிள் தண்ணீர் திருட்டு அதிகரித்து உள்ளது. அதுமட்டுமின்றி கால்வாயை ஒட்டி பல தண்ணீர் நிறுவனங்கள் வியாபார தேவைக்காக தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.