திருப்பூர்,
திருப்பூரில் பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் ஜோநோபல் (36). இவர் திருப்பூர் கருவம்பாளையம் அக்கரைதோட்டத்தில் பனியன் பிரிண்டிங் பட்டறை வைத்து அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்தார். இவருடைய பட்டறையில் தென்னம்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி (47), மதுரையை சேர்ந்த பாண்டியராஜன், சுமன்ராஜ், சென்னையை சேர்ந்த லோகேஷ் (18), சதீஷ் (19), ஸ்டீபன் (எ) ஸ்டீபன்ராஜ் உள்பட 6 பேர் வேலை செய்து வந்தனர். கடந்த 5ம் தேதி பாண்டியராஜன், சுமன்ராஜ் ஆகியோர் சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்று விட்டனர். பட்டறையில் இரவுப்பணி நடந்துள்ளது. தமிழ்செல்வி உள்பட 4 பேர்வேலைசெய்துள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு 1 மணி அளவில் பனியன் பிரிண்டிங் பட்டறைக்குள் தமிழ்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் ஜோநோபல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஜோநோபலின் பைக், திருப்பூர் ரயில் நிலையம் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,காவல் துறையினர் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன் (எ) ஸ்டீபன் ராஜ் பைக்கை மறைத்து வைத்தது தெரிய வந்தது. புதனன்று மாலை ரயில் நிலையம் அருகே பைக்கை எடுக்க வந்த ஸ்டீபனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சதீஷ், லோகேஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.