கோயம்புத்தூர்:
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில மாநாடு மே 11 துவங்கி 13 ஆம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது.மே11 வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து மாலை 4 மணிக்கு  பேரணி புறப்படுகிறது. இதர மாவட்டங்களில் இருந்து வேன், பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களின் மூலம் வருகிறவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் தோழர்களை இறக்கிவிட்டுவிட்டு உக்கடம், செல்வபுரம் பைபாஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் பேரணிக்கு வருபவர்கள் வடகோவை பேருந்து நிலையத்தில் இறங்கி பேரணி துவங்குமிடத்திற்கு வர வேண்டும். பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வருவோர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையம் முன்புறமிருந்து பூமார்க்கெட் செல்லும் நகரப்பேருந்தில் ஏறி பூமார்க்கெட் பேருந்து நிலையத்தில் இறங்கி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபத்திற்கு வர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: மாநாட்டு வரவேற்புக்குழு – எஸ்.மூர்த்தி 9489362323, எம்.கே.முத்துக்குமார் 7010960311, என்.செல்வராஜ் 9442843702, இர.செல்வம் 9894840435 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply