நாமக்கல்,
சிஐடியுவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தனின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் தோழர் கே.கே.நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட உதவி தலைவர் கு.சிவராஜ், எல்.ஜெயகொடி மற்றும் நிர்வாகிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

ஈரோடு:
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் வி.பி.சிந்தன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், ஜி.பழனிசாமி, பி.பழனிசாமி, மலைவாழ் இளைஞர் சங்க மாநில தலைவர் எம்.சடையலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: