மஞ்சூர்,
விவசாயிகளின் நிலங்களை பறிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மஞ்சூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குந்தாவை அடுத்த மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இடைக்குழு உறுப்பினர் ஐ.அலியார் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் குந்தா பாலம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை அந்நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். சக்கோட்டி பகுதியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதையை மீட்க வேண்டும். மஞ்சூர் காரமடை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மஞ்சூர் பஜார் பகுதியில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த பொதுக்கூட்டத்தில் கீழ்குந்தா, சக்கோட்டி, தாய்சோலா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: