பொள்ளாச்சி,
மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான மின் நுகர்வோர் முகாம் பொள்ளாச்சி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வெள்ளியன்று நடைபெற உள்ளது.

இம்முகாமானது உடுமலை சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக அலுவலக வளாகத்தில் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெற உள்ளது. இதில் வீட்டுமின் இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்பு, தொழிற்சாலை மின் இணைப்பு, வர்த்தக மின் இணைப்பு உள்ளிட்ட மின் இணைப்புகளின் பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே, பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து ரூ.200 கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என பொள்ளாச்சி மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.