திருப்பூர்,
திருப்பூரில் புதனன்று தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியாகினர்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சதிஷ் என்பவர், திருப்பூர் பழக்குடோன் பகுதியில் உள்ள துரை என்பவர் வீட்டில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தார். இவர், வீட்டின் முன்புறம் செடிகளை நடுவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் கடப்பாரை பட்டு அதன் மூலமாக சதிஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அலறி துடித்த சதிஷை காப்பாற்ற வந்த கொடுவாய் பகுதியை சேர்ந்த மணியம்மாள் என்ற பெண்மணியையும் மின்சாரம் தாக்கியது .இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: