இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின்  சொத்துகளை  அந்நாட்டின் உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொழில் அதிபர் விஜய் மல்லையா   இந்திய வங்கிகளிடமிருந்து  சுமார் 9ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். ஆனால் அதனை திருப்பி செலுத்தாமல் 2016 ல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து வங்கிகளுக்கு தர வேண்டிய கடனை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்த  வேண்டும் என்று இந்திய கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், லண்டனில் உள்ள வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், விஜய் மல்லையாவோ, உலகம் முழுவதும் உள்ள தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை லண்டன் நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நிராகரித்தார்.

மல்லையாவின் 10,000 கோடிக்கு மேல் செலுத்த வேண்டிய கடனை  திரும்பி பெற   இங்கிலாந்திலும், வேல்ஸிலும் உள்ள அவரின் சொத்துகளை விற்க 13 இந்திய வங்கிகளுக்கு இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடகா கடன் தள்ளுபடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது எற்று இங்கிலாந்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: