பொள்ளாச்சி,
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அன்பு நகர் பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். தெருவிளக்கு, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். களிம்பு தண்ணி ஊத்து பகுதியில் நில அளவை செய்து, நிலபட்டா உரிமை வழங்க வேண்டும். நாகரூத்து செட்டில்மென்ட் பகுதியில் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் திங்களன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமையில் மலைவாழ் மக்கள் திரளாக வந்திருந்து அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: