சேலம்,
ஓமலூர் அருகே பெண்ணிடம் 10 சவரன் சங்கிலியை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக புதனன்று சேலம் சித்தர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பேருந்தில் வந்துள்ளார். இவர் ஆர்.சி செட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் தவறுதலாக இறங்கியதால் காமலாபுரத்தை நோக்கி நடந்தது சென்றுள்ளார். அப்போது, ஒரு நபர் பிச்சை கேட்பதுபோல் வந்து அப்பெண் அணிந்திருந்த 10 சவரன் சங்கிலியை பறித்து தப்ப முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே அருகிலுள்ள பொதுமக்கள் திருடனை சுற்றிவளைத்து பிடித்தனர். இதன்பின் அவரை ஓமலூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில், அந்த நபர்சேலம் மணியனூரை சேர்ந்த கதிர்வேல் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: